அருப்புக்கோட்டையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
அருப்புக்கோட்டையில் பெல் மாஸ்டர் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
அருப்புக்கோட்டையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகராட்சி சுகாதாரதுறை சார்பாக பெல் மாஸ்டர் ராட்சத இயந்திரம் மூலம் நகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது
மேலும், நகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி நகர் காவல்நிலையம் விருதுநகர் சாலை தெற்குத் தெரு பஜார் சிவன் கோவில் மதுரை ரோடு திருச்சுழி ரோடு எஸ் பி கே ஸ்கூல் ரோடு சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீதிவீதியாக நகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெல்மாஸ்டர் ராட்சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. கவச உடை அணிந்த தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்