வாக்காளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த ராணுவ அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Update: 2021-03-07 03:04 GMT

அருப்புக்கோட்டையில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதே போல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தோ்தலில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில், பொது மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இந்த கொடி அணிவகுப்பு புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி, அண்ணா நகர் மெயின் பஜார், காய்கறி மார்க்கெட், எம்எஸ் கார்னர் என நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று திருச்சுழி சாலை காந்தி நகர் பகுதியில் நிறைவடைந்தது. அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சகாயஜோஸ் துவக்கி வைத்த இந்த கொடி அணிவகுப்பு பேரணியில் துணை இராணுவ படையினர் 50 பேர் மற்றும் போலீசார் 150 பேர் என 200க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News