செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே செல்பேன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2021-04-21 07:30 GMT

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் சாலாமேடு பகுதியில் உள்ள கிழக்கு சூரியா நகர், ஆசிரியர் நகர், ஸ்ரீராம்நகர், கஸ்தூரி நகர், பழனி ஆண்டவர் நகர், அபிதா கார்டன், கஸ்தூரி நகர், துரையரசன் நகர் பகுதிகளில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர். இங்கு அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன.

இங்குள்ள பழனி ஆண்டவர் நகர் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது. இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டால் கதிர் வீச்சு காரணமாக பொதுமக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, செல்லிடப்பேசி கோபுரத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News