தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி

விழுப்புரம் மாவட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-09-07 16:00 GMT

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியிருப்பதாவது,விழுப்புரம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி வட்டார பகுதி அலுவலகங்களில் வருகின்ற 13.09.2021 திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட நபர்களின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் உரிமம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுகளை உடன் எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News