சாதிப்பெயரை கூறி ஊராட்சி தலைவர் மனைவியை திட்டிய வாலிபர் கைது

திண்டிவனம் அருகே ஊராட்சி தலைவர் மனைவியை சாதிப் பெயரைக் கூறி திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-08-26 11:43 GMT

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட கிராண்டிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி விஜயா (வயது 45). இருளர் சமூகத்தை சேர்ந்தவர்.

இவர் கிராண்டிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவர் அன்பழகன் கிராண்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். விஜயா சம்பவத்தன்று பள்ளியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பள்ளி அருகே வசிக்கும் மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன் (32) என்பவர் குடிநீர் குழாயில் இருந்து மின் மோட்டார் மூலம் தனது வீட்டு செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

இதைபார்த்த விஜயா மணிகண்டனிடம் நேற்று தானே மழை பெய்தது? ஏன் தண்ணீரை பாய்ச்சி வீணாக்குகிறீர்கள் என கேட்டு்ள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் விஜயாவை ஜாதி பெயரைச் சொல்லியும், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சாதி பெயரை கூறி திட்டி தாக்கி கொலை மிரட்டல் வீடுத்த மணிகண்டனை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News