திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

Robbery News- திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-09-09 02:00 GMT

பைல் படம்.

Robbery News- விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் வெங்கட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் மகன் சதீஷ்குமார் (வயது41). இவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டார். திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ஐபோன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News