திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி

திருவள்ளூர் அருகே கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-07-22 17:30 GMT

பைல் படம்

திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் குப்பம்மா சத்திரத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (52). இவரது மகனுக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக திருவள்ளூர் நேதாஜி சாலையில் வசித்து வந்த சலாவுதீன் என்பவர் கடந்த ஆண்டு  ரூ. 8 லட்சம் வாங்கியுள்ளார்.

ஆனால் இது நாள் வரை கல்வித்துறையில் வேலை வாங்கித் தராமல் அலைக்கழித்து வந்துள்ளார். பணத்தைத் திருப்பி கேட்டாலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அவரது வீட்டிற்கு சென்று பார்த்தால் வீடு பூடப்பட்டிருக்கிறது. செல்போனில் தொடர்பு கொண்டால் செல்போன் அழைப்பையும் அவர் எடுக்காமல் தட்டிக்கழித்து உள்ளார்.

இதுகுறித்து ஜானகிராமன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சலாவுதீனை தேடி வருகின்றார்கள்,

Tags:    

Similar News