நேமம் - கடந்த ஆட்சி கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது -முதலமைச்சர்

கடந்த ஆட்சி கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதால் 2 வது அலை ஏற்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.

Update: 2021-05-26 07:37 GMT

கடந்த ஆட்சியில் கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதால் 2 வது அலை ஏற்பட்டுள்ளது. நேமத்தில் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.

திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.,

கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விழிப்புடன் இருக்க தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. ஊரகப் பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த கொரோனா வைரசின் தொடர் சங்கிலியை உடைக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக முழு தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதற்கு இரண்டு நாட்களில் நல்ல பயன் வந்துள்ளது. சென்னையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழு பயன் தரும். பொதுமக்கள் விதிமுறைகளை மீறி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

மக்களை காக்கும் பணியில் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆக்சிசன் தட்டுப்பாடு இல்லாத நிலையும், போதிய மருந்துகளும் இருப்பில் உள்ளது. கடந்த 6-1 -2021 முதல் இன்று வரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டு வலியுறுத்தும் கடந்த கால ஆட்சியில் கொரோனா வைரஸ் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக இரண்டாவது அலை ஏற்பட்டு உள்ளது.

இந்த இரண்டாவது அலையை தமிழக அரசு வெற்றிகரமாக முடித்து சங்கிலியை உடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து அரசு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்தார். ஒரு நாளைக்கு 61 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தமிழகத்தில் 3 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 267 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் நல்ல ஆயுதம்.கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் இந்த தொற்றினை உடைக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அனைவரையும் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் தொற்று தாக்கினாலும் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் தங்களைக் காக்கும் ஆயுதமாக இந்த தடுப்பூசி இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News