மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரி விவசாயிகள் போராட்டம்

மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்.

Update: 2021-08-02 16:15 GMT

மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்.

தமிழக விவசாயிகளின் திருச்சி மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நீதிமன்ற உத்தரவுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரியை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். தாளக்குடி மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கிட வேண்டும். தங்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தால் 5 ஆயிரம் மாடுகளை நரபலி கொடுக்க அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News