உழைப்பால் உயர்ந்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் - கருணாஸ் பேட்டி
அடி மட்டத்திலிருந்து தன் உழைப்பால் உயர்ந்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று கருணாஸ் தெரிவித்தார்.
அடி மட்டத்திலிருந்து உழைத்து, உயர்ந்து ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். சிறந்த நிர்வாக திறமையுள்ள ஸ்டாலின் தமிழகத்தின் இழந்த உரிமைகளை மீட்பார். எடப்பாடி அரசு கடுமையாக கடன் சுமையோடு தமிழகத்தை விட்டு சென்றுள்ளது அதையெல்லாம் ஸ்டாலின் மீட்பார் என்கிற நம்பிக்கை உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்தை புறக்கணித்து குறிப்பிட்ட சில சமூகங்களை மட்டும் ஒருங்கிணைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது.
முக்குலத்தோர் சமூகத்தை அரசியல் அநாதையாக்க நினைத்தார்கள் அதன் காரணமாக இன்று தோல்வியை சந்தித்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்பி தி.மு.க விற்கு வாக்களித்துள்ளனர் என்றார்.