திருச்சியில் பா.ஜ.க. கொடிக்கம்பம் அகற்றம்: போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
திருச்சியில் பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றப்பட்டதால் போலீசாரு டன்வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது.;
திருச்சியில் கொடிகம்பம் அகற்றப்பட்டதால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ், 80 அடி ரோடு கார்னர் பகுதியில் பா.ஜ.க சார்பில் கட்சி கொடி ஏற்றுவதற்காக 20 அடி உயரத்தில் கான்கிரீட் தளம் அமைத்து கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டது. இன்று காலை மாவட்ட துணை தலைவர் அழகேசன் தலைமையில் மண்டலத் தலைவர் தர்மராஜ் மற்றும் பலர் கட்சி கொடி ஏற்றுவதற்காக வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பா.ஜ..கவின் கட்சி கொடி கம்பத்தை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடம் பங்கு பா.ஜ.க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பா.ஜ.க. கொடி கம்பம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பா.ஜ.க.வினர் மாநகராட்சி அதிகாரிக.ளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மீண்டும் கட்சி கொடி கம்பம் அங்கு நடப்பட்டு பா.ஜ.க.வினர் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.