திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் மனு தாக்கல்
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.;
திருச்சி பாலக்கரை பருப்புகார தெருவில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அதிமுக கூட்டணி கட்சியினருடன் பேரணியாக புறப்பட்டு வந்த வெல்லமண்டி நடராஜன், வேட்பு மனு தாக்கல் அலுவலகத்திற்கு முன்பு தேர்தல் விதிமுறைபடி 100 மீட்டருக்கு முன்பாக தொண்டர்களை நிற்கச் செய்தார்.
அதன் பின்னர் பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், தமாகா மாவட்ட தலைவர் நந்தா செந்தில் ஆகியோருடன் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்திற்குள் சென்றார் அங்கு அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணனிடம் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வந்த வெல்லமண்டி நடராஜனை அதிமுக தொண்டர்கள் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.