திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு

திருச்சி மாநகரில் நேற்றைய முழு ஊரடங்கின் போது அத்தியவசிய தேவைகளை தவிர்த்து விதி முறைகளை மீறிய 620 பேர் மீது வழக்கு பாய்ந்தது என்று மாநகர போலீசார் தெரிவித்தனர்.

Update: 2021-04-26 05:45 GMT

கொரோனோ வைரஸ் நோய்தொற்று பரவுவலை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி நேற்று திருச்சி மாநகரின் அனைத்து பகுதியிலும் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் தலைமையில் 450 க்கு மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி, முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 620 மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, நெறிமுறைகளை மீறி செயல்பட்ட வணிக வளாகங்கள் 2 மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாநகர போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News