திருச்சியில் செல்போன் திருடியவர்கள் கைது
திருச்சியில் செல்போன் திருடியவர்களை போலீசார் கைதுசெய்தனர்.;
திருச்சி சங்கிலியாண்டபுரத்தை தேர்ந்தவர் சிவா என்கிற பரமசிவம். டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் டீக்கடையை பூட்டாமல் சாத்தி விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை கோரிமேடு சேர்ந்த அப்துல் நசீர் ,சதீஷ் ஆகியோர் திருடியுள்ளனர்.
இதை அவர் தடுக்கவே உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். காயமடைந்தவர் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து செல் போன் திருடர்களை சிறையில் அடைத்தனர்.