காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்ககோரி பாஜகவினர் ஆர்பாட்டம்;

Update: 2021-06-30 06:14 GMT

பாஜக திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் பாலக்கரை அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

திருச்சியை விட தொற்று அதிகம் உள்ள பல மாவட்டங்களில் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சில்லரை வியாபாரிகளை காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் பாலக்கரை அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் முழக்கம் இட்டனர்.

Tags:    

Similar News