விஜயதசமியை முன்னிட்டு திருச்சி பள்ளிகளில் இன்று மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமியை முன்னிட்டு திருச்சி பள்ளிகளில் இன்று காலை எல்.கே.ஜி, முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

Update: 2021-10-15 06:30 GMT

திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமியை முன்னிட்டு திருச்சியிலுள்ள பள்ளிகளில் இன்று காலை முதல் எல்.கே.ஜி, முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முதலில் அந்த பள்ளியில் இருந்த சரஸ்வதி சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கை பிடித்து தாய்மொழியான தமிழின் முதல் எழுத்தான "அ" எழுத வைத்து கல்வி கற்க துவக்கி வைத்தனர். இதே போல ஏராளமான பள்ளிகளில் பெற்றோர்கள் இன்று தங்களது குழந்தைச் செல்வங்களை பள்ளிகளில் சேர்த்து தமிழ் எழுத்துக்களை குழந்தைகளின் கையைப்பிடித்து எழுத வைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

வித்யாரம்பம் என அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியால் சரஸ்வதியின் அருள் அந்த குழந்தைகளுக்கு நேரடியாக கிடைப்பதாக பெற்றோர்கள் எண்ணுகின்றனர். இதனால் இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது மிகவும் சிறப்பான நாள் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News