திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் குட்டி குடி திருவிழா
திருச்சி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் குட்டி குடி திருவிழா மிக சிறப்பாக நடந்தது.;
திருச்சி தென்னூர் உக்கிரமாகாளி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது.
திருச்சி தென்னூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஉக்கிரமாகாளியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் குல தெய்வமும், மாநகர காவல் தெய்வமுமான இக்கோவிலில் வருடாந்திர தேரோட்ட விழா கடந்த வாரம் தொடங்கியது. தென்னூர் காவல் கார தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது அம்மனுக்கு தேங்காய் பழம் சாற்றி வழிபாடு செய்தனர்.
இதனை தொடர்ந்து தென்னூர் மந்தையில் இன்று காலை அம்மனின் அருள் பெற்ற மருளாளி பிரபாகரன் பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய ஆட்டு குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து அருள்வாக்கு கூறினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள்,அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.