திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பின்னர் திருச்சி சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திடீரென திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு சென்றார் .அங்கு மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் தாய் சேய் நல விடுதிகளில் செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் கே .என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.