நகர்ப்புற தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் திருச்சி கலெக்டர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.;

Update: 2022-01-28 16:14 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் உள்ள உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.

வேட்பு மனு தாக்கலின்போது அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள், பிரசாரம் மற்றும் வாக்கு பதிவு வாக்கு எண்ணிக்கை  தொடர்பாவும், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News