திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-03-16 03:27 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் குழுவினர் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்த ஒரு ரயிலின் பெட்டியில் சோதனை நடத்திய போது 9½கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு ரூ/ 36ஆயிரத்து 500 ஆகும். இதனை ரயிலில் கடத்தி வந்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News