அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது

திருச்சியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-26 13:00 GMT

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் குடி தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மண்ணச்சநல்லூர் கிளையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

 சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் செல்வதற்காக இரவு 8.15 மணிக்கு பஸ்சை எடுத்தபோது ஒரு வாலிபர் அரசு பஸ்சில் முன்பக்க கண்ணாடியில் திடீரென கருங்கல்லை எடுத்து அடித்து உடைத்துள்ளார். இது குறித்து டிரைவர் கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் கண்ணாடியை உடைத்த திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News