திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு

திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-12-09 09:16 GMT

திருச்சி கே.கே.நகர் கே.சாத்தனூர் கலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை விவாகரத்து செய்த இவர் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கார்த்திக்ராஜா என்பவரை ஹேமலதா 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவரிடம் இருந்து 20 பவுன் நகைகளை பெற்றுக்கொண்ட கார்த்திக்ராஜா, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹேமலதா கேட்டபோது, ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News