ரூ.1000 கோடி திட்டங்கள் துவக்க மு.க.ஸ்டாலின் 30-ம் தேதி திருச்சி வருகை

ரூ.1000 கோடியில் திட்டங்களை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி திருச்சி வருகிறார்.

Update: 2021-12-20 07:22 GMT

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் பங்கேற்றனர்.  இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று தேர்வு செய்யப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது வருகிற 30-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மிகப்பெரிய விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். திருச்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்கள் திருச்சியில் துவங்கப்பட உள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார் என்று கூறினார்.

Tags:    

Similar News