'மரங்களின் மீது காதல் கொள்வோம்' கையேடு- திருச்சியில் வெளியீடு
‘மரங்களின் மீது காதல் கொள்வோம் கையேடு’- திருச்சியில் வெளியிடப்பட்டது.;
மரம் -மழை - மகிழ்ச்சி என்ற தலைப்பில் மரம் ஆர்வலர்களின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரனின் மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியிடப்பட்டது. அதனை ஓசை காளிதாசன் வெளியிட தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் பெற்றுக்கொண்டார்.
கிராமாலயா பத்மஸ்ரீ சே.தாமோதரன் கையேட்டின் முதல் பக்கத்தில்"மரங்களை போற்றுவோம்" இந்த உலகில் வன்னி மரங்கள் என்று அழிகின்றனவோ வில்வ மரங்கள் என்று மறைகின்றனவோ துளசி செடிகள் என்று இல்லாமல் போகின்றதோ! கடவுளுக்கு உகந்த தல விருட்சங்களும் என்று காணாமல் போகின்றதோ அன்று இந்த உலகம் அழியும். இவை அனைத்தும் இறைவனை வணங்க பயன்படுகின்றது. ஆதலால் மரங்களை காப்போம் !இதன் மூலம் இயற்கையை நேசிப்போம் !இந்த பூமியில் நாமும் சுவாசிப்போம் ! என குறிப்பிடப்பட்டு உள்ளது.