தமிழக கவிஞர் ஜோசன் ரஞ்சித்துக்கு இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு விருது

தமிழகத்தை சேர்ந்த முனைவர் கவிஞர் ஜோசன் ரஞ்சித் இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு என்ற விருதினைப் பெற்றார்;

Update: 2022-03-30 10:30 GMT

டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த முனைவர் கவிஞர் ஜோசன் ரஞ்சித் இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு என்ற விருதினைப் பெற்றார்

தமிழகத்தை சேர்ந்த முனைவர் ஜோசன் ரஞ்சித்.டெல்லியில் நடைபெற்ற டாப்நோட்ச் பவுண்டேஷன், அவுட்லுக் வார இதழ், இந்தியா நியூஸ் நிறுவனம் இணைந்து நடத்திய விழாவில் இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு விருது வழங்கப்பட்டது.

இந்தியாவிலுள்ள பல துறைகளில் சாதனை புரிந்த எழுபது சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் கிஷான் ரெட்டி, ராம்தாஸ் அத்வாலே, பகன் சிங் குலஸ்தே, ஜான் பர்லா, மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் சாகர் மற்றும் நடிகர் சுன்கி பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது மற்றும் நற்சான்றிதழை வழங்கி கெளரவித்தனர்.

இவ்விழாவில்,டெல்லியில் உள்ள உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சர்வதேச உறுப்பினரும் திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டியை சேர்ந்தவருமான முனைவர்.கவிஞர் ஜோசன் ரஞ்சித்திற்கு இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு என்ற விருது வழங்கப்பட்டது.

 விழாவில் தமிழகத்தின் சார்பில் கவிஞர் ஜோசன் ரஞ்சித் ஒருவர் மட்டுமே விருது பெற்றவர் என்பது பெருமைக்குரியது. கவிஞர் ஜோசன் ரஞ்சித் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றி "அன்பு உடன்பிறப்பே" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.இதுவரை கவிஞர் ஜோசன் ரஞ்சித் நான்கு தமிழ் கவிதை நூல்களையும் மூன்று ஆங்கில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளதுடன் இந்நூல்கள் 140 நாடுகளில் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக வெளியிடப்பட்டி ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்பிரிங் யூத் ஐகான் ஆப் தமிழ்நாடு என்ற விருதினைப் பெற்ற முனைவர்.கவிஞர் ஜோசன் ரஞ்சித்திற்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,எழுத்தாளர்கள், கவிஞர்கள் என‌ பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News