திருச்சியில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-10-16 06:30 GMT

நாமம் போட்டு நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும். மழையினால் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சி அண்ணாமலை நகரில் கடந்த 12-ஆம் தேதி முதல் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 5ஆம் நாளான இன்று விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் நாமம் போட்டுவிட்டது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவர்களது நெற்றியிலும், உடலிலும் நாமம் போட்டுகொண்டு நூதன முறையில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News