முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை சென்றார்

டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு முடித்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை சென்றார்.;

Update: 2021-11-12 19:20 GMT

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

நாகை,திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 13ந்தேதி இரவு 9 மணி அளவில் திருச்சிக்கு கார் மூலம் வந்தார்.

திருச்சி விமான நிலையத்தின் ஓய்வறையில் தங்கி இருந்த மு.க. ஸ்டாலின் அங்கு தனது இரவு உணவை முடித்தார். பின்னர் 10 அணி அளவில் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News