திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு கூட்டம்

திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57-வது வார்டு குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-12-05 13:25 GMT

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 57வது வார்டு குழு கூட்டம் நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குட்பட்ட 57வது வார்டின் கிளை மாநாடு இன்று களத்து மேட்டில் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.மாநகர்.மா.செயலாளர். ஏ.கே.திராவிடமணி கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து மாவட்ட குழு முடிவுகளை விளக்கி பேசினார்.

கிளை செயலாளரின் வேலை அறிக்கை. வரவு செலவு அறிக்கை வைக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. புதிய கிளை செயலாளராக எம்.துரைராஜ். துணை செயலாளராக லெட்சுமணன். பொருளாளராக ஜாகிர் உசேன் தேர்வு செய்யப்பட்டனர். பகுதி செயலாளர் முரளி புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் எஸ்.சிவா.சங்கீதா.சுரேஷ். தாமரைகண்ணன். சண்முகம். அஜ்ஜி. சுப்ரமணி.  ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

சமீபத்தில் பெய்த மழையினால் 57வது வார்டு முழுவதும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் புதியதார்சாலை அமைக்க வேண்டும்.சாக் கடைகளை முழுமையாக தூர்வார வேண்டும். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் ( 57வது வார்டு பழையது புதிய வார்டு11) தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் துரைராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News