திருச்சி சரகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 223 பேர் கைது: போலீசார் அதிரடி
திருச்சி சரகத்தில் கள்ளச்சந்தையில் மது விற்றதாக 223 பேரை கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக சோதனை நடைபெற்றது. இதில் 93 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதோடு, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து திருச்சி சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக திருச்சியில் 60 வழக்குகள், புதுக்கோட்டையில் 48 வழக்குகள், கரூரில் 52 வழக்குகள், பெரம்பலுாரில் 32 வழக்குகள், அரியலுாரில் 31 வழக்குகள் என மொத்தம் 223 வழக்குகள் பதியப்பட்டு, 223 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரத்து 345 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.