Thuraiyur bus stand-முகம் சுளிக்கவைக்கும் துர்நாற்றம்..! துறையூர் பேருந்து நிலையத்தின் அவலம்..!
துறையூர் பேருந்து நிலையத்திற்கு தினமும் சுற்றியுள்ள திருச்சி, பெரம்பலூர், ஆத்தூர் போன்ற நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர்.
Thuraiyur bus stand
துறையூர், திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது கிரேடு நகராட்சி ஆகும். இது திருச்சியில் இருந்து 47 கி.மீ. வட மேற்காக அமைந்துள்ளது. சேலம் 100 கிலோமீட்டர் தூரத்தில் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பெரம்பலூர், ஆத்தூர் , நாமக்கல், முசிறி ஆகிய நகரங்கள் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. துறையூர் நகரம் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளை கொண்டுள்ளது. மேலும் துறையூரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன.
Thuraiyur bus stand
கிராமத்து மக்கள் அரசு அலுவலகங்களுக்காகவும் தங்களது தேவையான பொருட்களை வாங்குவதற்கும் துறையூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.
துறையூர் நகரம் கிழக்கு தீர்க்க ' வட அட்சரேகை மற்றும் 78o36 ' 11o09 அமைந்துள்ளது. நகரத்தின் கிழக்கு எல்லையாக முத்தம்பாளையம் மற்றும் கீரம்பூர் கிராமங்களும் மற்றும் மேற்கே வெங்கடேசபுரம், அம்மாபட்டி கிராமமும் தெற்கே முருகூர், வடக்கு எல்லையாக மருவத்தூர் அமைந்துள்ளது.
போக்குவரத்து இணைப்பு
துறையூர் நகரம் பஸ் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், திருச்சி, நாமக்கல்,ஆத்தூர், முசிறி ஆகிய நகரங்கள் அடங்கும்.
Thuraiyur bus stand
துறையூர் பேருந்து நிலையம்.
இப்படி முக்கிய நகரங்களை இணைக்கும் துறையூர் பேருந்துநிலையம், ஒரு நகராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது. ஆனால், அந்த பேருந்து நிலையத்தில் மழை பெய்தால் யாரும் நிற்க முடியாது. பேருந்து நிலையத்தின் வெளிப்புறம் கடைகள் பாதி இடத்தை அடைத்துள்ளன.
கழிவு நீர் செல்லும் கால்வாயின் மூடிகள் சில இடங்களில் உடைந்து கிடக்கின்றன. அதன் வழியே துர்நாற்றம் வீசி நகரத்திற்கான மதிப்பை கெடுக்கிறது.
கழிவறை
துறையூர் நகர பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறை போல வேறு எங்கேயும் பார்த்திருக்கமுடியாது. அவ்வளவு மோசமாக கிடக்கின்றது. பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. சிறுநீர் கழிப்பதற்கு ரூ.5 வாங்குகிறார்கள். அனால் உள்ளே துர்நாற்றம் வீசி நாசியை துளைக்கிறது.
Thuraiyur bus stand
அதனால் பலர் கழிப்பறையை பயன்படுத்துவதில்லை. பேருந்து வெளியேறும் பகுதியில் வரிசையாக கழிவுநீர் கால்வாயில் சிறுநீர் கழிக்கிறார்கள். அந்த இடத்தை கடந்து செல்வோர் மூக்கை பிடிக்காமல் செல்லமுடியாது. போதாதற்கு அந்த கால்வாயில் அருகில் உள்ள கட்டிடத்தின் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனால் அடைப்பு ஏற்பட்டு சில இடங்களில் தேங்கி நிற்கிறது.
பேருந்து நிலையத்தின் நடைபாதைகளில் முக்கால்வாசி இடத்தை வியாபாரம் செய்வோர் அடைப்பட்டுள்ளனர். அதனால் சாதாரண கூட்டம் என்றாலும் அடைந்து கிடப்பதுபோல கூட்டம் தெரிகிறது.
தம்மம்பட்டி பேருந்து நிற்கும் பகுதியில் நின்றால் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள டீ கடைகளின் கழிவு நீர் அங்கு செல்லும் கழிவுநீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூடி உடைந்து பாதியாக நிற்பதால் துர்நாற்றம் வீசி பயணிகளை முகம் சுளிக்க வைக்கறது.
Thuraiyur bus stand
ஆன்மிக நகரம் துறையூர்
துறையூரில் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். ஆனால் அவ்வாறு வரும் பக்தர்கள் முகம் சுளிப்பது பேருந்து நிலையத்தை பார்த்துத்தான் என்பதை நகராட்சி நிர்வாகம் உணரவேண்டும்.
Thuraiyur bus stand
உடனடி தேவைகள்
கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு அதற்கு மூடிகள் போட்டு மூடுவது. கழிவறை கட்டுதல் மற்றும் முறையான பராமரிப்பு செய்தல், பேருந்து வெளியேறும் பகுதியில் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கு கண்டிப்பான நடவடிக்கை எடுத்தல், நடைபாதையை ஆக்ரமித்து இருக்கும் வியாபாரிகளை ஓரமாக இருக்கவைத்தல் போன்றவையாகும்.
செய்வார்களா நகராட்சி நிர்வாகத்தினர்.?
துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் கால அட்டவணை இந்த இணைப்பில் உள்ளது.
http://www.thuraiyurinfo.com/p/thuraiyur-bus-time-table.html