உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் ஆறுதல்

உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.;

Update: 2021-11-18 05:46 GMT

உப்பிலியபுரத்தில் மழையால் வீடுகள் இடிந்தன.

உப்பிலியபுரத்தை அடுத்த வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமாயி (வயது 65). இவரது வீடும், அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 50) என்பவரது வீடும் மழையால் இடிந்து விழுந்தன.

இதில் துரைசாமியின் வீட்டிலிருந்த பீரோ, கட்டில், 10 சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்த உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, பி.மேட்டூர் கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவாசகம், ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு, உதவிப் பொருட்களை வழங்கியதுடன், சேத விவரங்களை கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News