பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் துறையூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-24 10:51 GMT

துறையூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர். 

திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு,  நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி, திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில், பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி நகர தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். துறையூர் நகர செயலாளர் செந்தில்நாதன், மாநில பரப்புரையாளர் சரவணன், தொகுதி செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பரப்புரையாளர் சரவணன் கலந்துகொண்டு, தமிழகத்தில் பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவற்றின் விலை ஏற்றத்தையும் இதனால் பாதிக்கப்படும் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான காய்கறிகள் ,அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை ஏற்றத்தையும் குறித்து விளக்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, அரசு எதிராக கோஷமிட்டனர். கட்சியின் துறையூர் தொகுதி இணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News