திருச்சி- தஞ்சசை சாலையில் உள்ள தனியார் மதுபான பாரை மாற்ற கோரிக்கை
திருச்சி -தஞ்சை சாலையில் உள்ள தனியார் பாரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.;
திருச்சி பழைய பால்பண்ணை,திருவெறும்பூர்-தஞ்சைசெல்லும் சாலையில் தனியார் மதுபான பார் உள்ளது. இந்த பாருக்கு முன்சாலையை ஒட்டி 100மீட்டர் தூரம் வரை டூவீலர்கள்நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த இடத்தை கடந்து செல்லமுடியாமல் அவதிபடுகின்றனர். இந்த பாரில் இருந்து மது அருந்தி விட்டு வருபவர்கள் சாலையில் தள்ளாடியபடியே வாகனங்களிலும், நடந்தும் கொள்கின்றனர்.
இதனால் இந்தப் பகுதியில் அதிக அளவில் விபத்து நடக்கிறது. மேலும் குடித்து விட்டு வருபவர்கள் அவ்வழியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். எனவே விதிகளை மீறி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பாரை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.