திருவெறும்பூர் தொகுதியில் குமார் வேட்பு மனு தாக்கல்

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

Update: 2021-03-15 07:15 GMT

திருச்சி திருவெறும்பூர் கல்லைண பிரிவு ரோட்டில் உள்ள வெள்ளை விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்ட அவர் அதன் பின்னர் தொண்டர்கள் புடைசூழ பேரணியாக புறப்பட்டு திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் சென்றார்.

பேரணியாக வந்த அனைவரும் தாலுக்கா அலுவலகம் முன்பு நின்றுவிட்டனர். வேட்பாளர் குமார் இஸ்லாமிய தொண்டர் ஒருவருடனும், கிறிஸ்துவ மத தொண்டர் ஒருவருடனும் உள்ளே சென்றார். அங்கு தேர்தல் நடத்தும அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் பேரணியில் பாமாக மாவட்ட தலைவர் திலீப், தமாகா மாவட்ட தலைவர் குணா, அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.ராவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், பாண்டியன், தண்டபாணி, டிடி.கிருஷ்ணன், பர்வீன் கனி, வர்த்தக அணி செயலாளர் ராஜமணிகண்டன், கலைப்பிரிவு ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஸ்குமார், மாவட்ட துணை செயலாளர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பொய்கைகுடி முருகன், கார்த்திக், முருகா, தமிழரசி, விஜி ஆறுமுகம், கோமதி, சுபத்ரா சுப்பிரமணியன், ஐடி பிரிவு சுரேஷ், நிர்வாகிகள் பாலா, பாலமூர்த்தி, அறிவழகன், முருகானந்தம், எஸ்பி.பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News