திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு பேருந்து சேவை துவக்கம்

திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சிக்கு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி துவக்கி வைத்தார்.;

Update: 2022-04-03 11:15 GMT

புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது காட்டூர் பாப்பா குறிச்சி. இங்கு பஸ் வசதி வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

அவர்களது கோரிக்கையை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ,தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றுக்கொண்டார்.

இதனையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் காட்டூர் பாப்பா குறிச்சி வரை அரியமங்கலம் வழியாக தினசரி 4 நடைகள் இயக்கப்படும் புதிய பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காட்டூர் பெரியார் சிலை அருகில் இதற்கான விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு, திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, கோட்டத் தலைவர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே . என் .சேகரன், பகுதி கழக செயலாளர் நீலமேகம், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News