லெனின் கம்யூனிஸ்ட் கட்சிநிறுவனர் கூத்தகுடிசண்முகம் பிறந்த நாள் விழா
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் லெனின் கம்யூனிஸ்ட்கட்சி நிறுவனதலைவர் கூத்தகுடி டாக்டர் சண்முகம் பிறந்தநாள் விழா நடைபெற்றது;
லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் முன்னாள் எம்எல்ஏ கூத்தகுடி சண்முகம் பிறந்த நாள் விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் சார்பில் லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் கூத்தகுடி டாக்டர் சண்முகம் 98-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கொடியேற்று விழா, அதனை தொடர்ந்து உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, லெனின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மணிகண்டம் ஒன்றிய அமைப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், திருச்சி மாவட்ட செயலாளர் பத்மநாபன் வரவேற்றார், தொடர்ந்து கட்சியின் மாநில பொது செயலாளர் கே.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார், இதில், பேனாமுனை சின்ன பெருமாள், மாநில பொருளாளர் செல்லகண்ணு, ஸ்தாபன அமைப்பாளர் லீலாவதி, மாநில துணைச்செயலாளர் சூசை அருள், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் லட்சுமணன், மாநில இளைஞரணி செயலாளர் ஞானமுத்து, புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் நகர அமைப்பாளர் அல்லாபக்காஸ் நன்றி கூறினார்.