திருச்சியில் கலப்பட டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பறிமுதல்
திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்;
கலப்பட டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் நோக்கி வருவதாக திருச்சி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் உள்ளிட்ட போலீசார் சமயபுரம் டோல் பிளாசா அருகே சம்பந்தப்பட்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த டேங்கர் லாரியில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கலப்பட டீசல் ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 46) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.