திருச்சியில் இன்று 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறப்பு

திருச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

Update: 2021-11-01 06:11 GMT
திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம்பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளி,கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகள் மட்டும் திறக்காமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 9முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.

கல்லூரிகளிலும் வகுப்புகள் துவங்கப்பட்டது.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் உள்ளதால், 19மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம்வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் உடல்வெப்ப பரிசோதனை செய்தனர்.மேளதாளம் முழங்க பூங்கொத்துகொடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

பெரும்பாலான பள்ளி வாகனங்கள் ஓடாத நிலையில் பெற்றோர்கள் தங்கள் சொந்த இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டுச்சென்றனர். தொடர்ந்து சானிடைசர் கொண்டு கையை சுத்தம் செய்தனர்.பின்னர் மாஸ்க் அணிந்து வந்தமாணவர்கள் வகுப்புகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர். மாஸ்க் அணிந்து வராத மாணவர்களுக்கு பள்ளிகள் சார்பில் மாஸ்க் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News