ஸ்ரீரங்கம் கோவிலில் தை தேர் திருவிழாவிற்காக முகூர்த்த கால் நடும் நிகழ்வு

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர் திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Update: 2022-01-07 09:45 GMT

ஸ்ரீரங்கள் கோவிலில் தைத்தேர் விழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் விழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வருகிற 9.1.2022-ந் தேதி அன்று தைத் தேர் (பூபதி திருநாள்) திருவிழா துவங்குகிறது.

புனர்பூச நட்சத்திரத்தில் ஓடும் தைதேரோட்டம் வரும் 17.1.2022 அன்று நடைபெற உள்ளது. ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்த திருத்தேரோட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. தைத் தேர் திருவிழா மிக நெருக்கத்தில் வருவதன் காரணமாக இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழாவை மார்கழியில் நடத்தாமல் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் நடத்தியது.

ஸ்ரீரங்கம் கோயிலின் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா. அதைவிட பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News