திருச்சி:கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-23 13:00 GMT

திருச்சி மாவட்டம் கொடியாலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடியாலம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளது. இதில் கடந்த 7 வருடங்களாக 100 நாள் வேலைக்கு ஒரே அலுவலரே மாறி மாறி அனைத்து வேலைகளையும் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுவாக இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 நாட்களுக்கு ஒரு அலுவலர் நியமிப்பது வழக்கம். ஆனால் இந்த ஊராட்சியை பொருத்தவரை ஒரே அலுவலரே கடந்த 7 வருடமாக இந்த பணியை பார்த்து வருவதால் ஏராளமான முறை கேடு நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். ஆகையால் இன்று 1 மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்கள் நூறு நாள்  வேலை  அலுவலரை மாற்ற வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது ஒன்றிய ஆணையர் சீனிவாசன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News