திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்த கும்பல்
திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி உறையூர் டாக்கர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் . இவருடைய மகன் குணசீலன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உணவகம் வைத்துள்ளார். நேற்று இரவு கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கு சென்ற போது, அய்யாளம்மன் படித்துறை அருகில் சென்ற போது அவரை வழிமறித்து, கண்ணாடி பாட்டிலை உடைத்து கழுத்து பகுதியில் குத்துவது போல மிரட்டி, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வெள்ளி கைசெயின், கழுத்தில் அணிந்திருந்த செயின், செல்போன் போன்றவற்றை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துகொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.