திருச்சி மாவட்டம் முசிறியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அ.தி.மு.க.வினரால் அளிக்கப்பட்டது.;
கரூர் மாவட்டம் குளித்தலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி இன்று காலை வந்தார்.
திருச்சி மாவட்ட எல்லையான முசிறியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன் (திருச்சி மாநகர்) பரஞ்சோதி (திருச்சி வடக்கு) குமார் (திருச்சி தெற்கு)தலைமையில் அளிக்கப்பட்ட இந்த வரவேற்பில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.