திருச்சி மாவட்டம் அரியாற்றில் கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிக மழை பெய்ததால் கலெக்டர் அரியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2021-12-06 15:56 GMT

மணப்பாறையில் பெய்த பலத்த மழையால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி  வரை அதிகப்படியான கன மழைப் பொழிந்தது, இதில் 274.6 மில்லி மீட்டர் மழையானது பதிவாகி உள்ளது.

அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால், திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரை ஓரத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திடுமாறும் மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News