மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி, ஆய்வு செய்த எம்எல்ஏ கதிரவன்

மண்ணச்சநல்லூரில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கதிரவன் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-07 11:30 GMT

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி 6வது வார்டில் கழிவுநீர் கால்வாய் கிணற்றை சுத்தம் செய்யும் பணியை எம்எல்ஏ கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நகரப்பகுதியில் உள்ள 6 வார்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைத்து செல்கிறது. அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் கழிவுநீர்கள் 20 அடி கிணற்றில் சேகரமாகிறது. 

கிணற்றில் இருந்து குழாய் அமைத்து கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். இந்த சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்புகள் ஏற்ப்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது.

அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது.இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி  மக்கள் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது..இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ கதிரவனிடம் கழிவுநீர் கால்வாயை தூர்வார மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கிடப்பில் கிடந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திமுக எம்எல்ஏ கதிரவன் 24 மணி நேரத்தில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் இன்று சாக்கடை கால்வாயை தூர்வாரினர். கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியிணை திமுக எம்எல்ஏ கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மண்ணச்சநல்லூர் நகர திமுக செயலாளர் சிவசண்முக குமார், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் கண்ணன், திமுக பொருளாளர் கார்த்திகேயன்,  ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், செந்தில், ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியதுணை சேர்மன் செந்தில், முன்னாள் பேரூராட்சி தலைவர் அஜய்ஸ்ரீதர் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News