மண்ணச்சநல்லூர் அருகே கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம்
மண்ணச்சநல்லூர் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.;
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை ஊராட்சி குன்னாகுளம் கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.