மண்ணச்சநல்லூரில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வேட்பு மனு தாக்கல்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்சோதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி காந்தி சிலை அருகில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்களுடன் பேரணியாக புறப்பட்டார்.
எல்.எப்.ரோடு வழியாக பேரணியாக கடந்து சென்ற அவர் துறையூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தார். அதன் பின்னர் மண்ணச்சநல்லூர் தேர்தல் நடத்தும் அதிகாரி ராமனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு மாற்று வேட்பாளர் மனுவினை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ஆதாளி, முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவீந்திரன். பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன், இனாம் கல்பாளையம் ஊராட்சி தலைவர் பாஸ்கரன், திருப்பைஞ்சீலி ஊராட்சி தலைவர் தியாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அய்யம்பாளையம் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.