அ.தி.மு.க.:நகர்ப்புற தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் நேர்காணல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களிடம் திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நேர்காணல் நடத்தினார்.;
திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிருப்ப மனு அளித்தவர்களிடம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி நேர்காணல் நடத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நல அணி செயலாளர் புல்லட் ஜான், பொருளாளர் சேவியர், பேரூர் கண்ணதாசன், விவேக், ATP பாஸ்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பெட்டவாய்த்தலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், மண்ணச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் நேர் காணல் நடந்தது. நிகழ்ச்சியில் அந்தந்த தொகுதியில் உள்ள தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.