லால்குடி பரவன் ஓடை தூர் வாரும் பணி : பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு

லால்குடி பகுதியில் அமைந்துள்ள பரவன் ஓடை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2021-06-03 10:39 GMT

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் பரவன் ஓடையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி கிராமத்தில் உள்ள பரவன் ஓடையை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று நேரில் ஆய்வு செய்தார் .

 மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி நடுக்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம் , செயற்பொறியாளர்கள் நீர்வள ஆதாரத்துறை ஆசைத்தம்பி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News