திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சிலைகள் மீட்பு

திருவிடைமருதூர் அருகே சாலை விரிவாக்க பணியின் போது இரண்டு கருங்கல் சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன.

Update: 2022-05-31 15:30 GMT

திருவிடை மருதூர் அருகே மீட்கப்பட்ட சுவாமி சிலைகள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. சாலையோரம் உள்ள பழமையான மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் அருகில் மரத்தின் வேர்களை பெயர்த்து எடுக்கும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த இரண்டு கருங்கல் சிலைகள் மீட்கப்பட்டது.

மூன்று அடி உயரம் உள்ள அப்பர், திருஞானசம்பந்தர் சிலைகள் அடி பீடத்துடன் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சிலைகளைப் பார்த்து பூஜை செய்து வழிபட்டனர். இதுபற்றி நரசிங்கன்பேட்டை பஞ்சாயத்து தலைவர் மாலதி சதீஷ்ராஜ் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தப் பகுதியில் மேலும் மண்ணுக்குள் சிலைகள் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் பார்க்க மேலும் தோண்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News