திருவிடைமருதூர் கோவிலில் பத்திரிகிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கோவிலில் பத்திரி கிரியார் சிலை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மிகப்பெரிய சிவாலயமான மகாலிங்க சுவாமி ஆலயத்தின் மேற்கு கோபுரத்தின் உள்ளே வலதுபுறம் மாடத்தில் கருங்கல்லால் ஆன 4 அடி உயரமுள்ள பத்திரகிரியார் சுவாமி சிலை இருந்தது. இந்த சிலை நான்கு துண்டுகளாக உடைந்த நிலையில் கீழே கிடந்துள்ளது. இதனை கவனித்த இக்கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் பத்திரிகிரியார் சிலையை உடைத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலை உடைந்த சம்பவம் திருவிடைமருதூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.